search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன விலங்கு"

    ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஆண்டு தோறும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியுள்ளது. ராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதி மற்றும் தேவதானம் சாஸ்தா கோவில் வனப்பகுதிகளில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் வன துறையினர் மற்றும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குழுவிற்கு 5 நபர்கள் வீதம் 6 குழுக்களாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த குழுவினர் அய்யனார் கோவில், சாஸ்தா கோவில், மலட்டாறு, அம்மன் கோவில் பீட், மாவரசியம்மன் கோவில், நாவலூத்து, கோட்டை மலை, பிறாவடியார், நீராவி அருவி உள்ளிட்ட பகுதிகளில் வன விலங்குகளின் கால் தடங்கள், எச்சம், வகைகளை சேகரித்து வனத்துறை அலுவலகத்திற்கு அறிக்கையாக வழங்குவார்கள். 
    ×